பதினான்கு வயது சிறுவன் மன்பிரீத் கடந்த ஜீன் 30 அன்று மும்பை, கிழக்கு அந்தேரியில் ஏழாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டான். இந்தத் தற்கொலை நிகழ்வு புளுவேல் என்ற நீலத் திமிங்கில இணையதளத் தற்கொலை விளையாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டது. அவனது இடது கையில் நீலத்திமிங்கிலத்தின் உருவம் வரையப்பட்டிருந்ததாகவும், புளுவேல் விளையாட்டுப்பற்றிய குறிப்பு எழுதப்பட்டிருந்த தாள் அவனிடமிருந்து கைப்பற்றப் பட்டதாகவும் செய்தி பரவிற்று புளுவேல் தற்கொலை இந்தியாவில் நடைபெற்ற முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது. அவன் தற்கொலை செய்த நாள் திங்கட்கிழமை. “நான் புளுவேல் விளையாட்டிலிருப்பதால், திங்கட் கிழமை என்னால் பள்ளிக்கு வர இயலாது என்று அவன் தெரிவித்திருந்ததாக வகுப்புத் தோழர்கள் சாட்சியமளித்தார்கள்.