மெல்லிசை – 19, தொன்போஸ்கோ கல்லூரி, ஏலகிரி
ஏலகிரி மலை, தொன்போஸ்கோ கல்லூரி (இருபாலர்), நாள் 19.01.2019, பிற்பகல் 2:00 மணியளவில் பொன் விழா அரங்கில் மெல்லிசை விழா, தொன் போஸ்கோ இசைக்குழுவினால் நடத்தப்பட்டது. அருட்தந்தை முனைவர். ததேயூஸ், ச.ச கல்லூரி முதல்வர், அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அருட்தந்தை கசி சகாயராஜ், ச.ச, துணை முதல்வர் சிறப்புரையாற்றினார்.
முனைவர். ச. பிலவேந்திரன் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அவர்கள் குறிப்பிட்டு பேசும்போது, “மாணவர்களின் வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது நிரந்தரமல்ல. தோல்வியடைந்தவர்கள் அதைக் கண்டு துவண்டுவிடக்கூடாது. வெற்றி பெற்றவர்கள் வியப்பில் ஆழ்ந்துவிடக்கூடாது.” என்று செய்தியை கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்.
அவர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக அருட்சகோதரி. ஜெயா, எம். எஸ். ஐ, திருவாளர் மோயிசன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மாணவர்களுக்கு நான்கு அமர்வுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. பேராசிரியர். ஜான்பென்டிக்ட், இசைக்குழு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இறுதியாக நன்றியுரையுடன் விழா இனிதே முடிடைந்தது.